1952. | உள்ளங் கொடியா ருயிர்க்கொலை 2காதலர் வெள்ளங் கொடியன மேவிப் பிறன்பொருள் கொள்ளுங் கொடுமைக் 3குணத்தின் மனித்தரும் நள்ளலர்ச் சாய்த்தோய் நரக மடைவார். | (இ - ள்.) நள்ளலர்ச் சாய்த்தோய் - பகைவர்களை வென்ற வேந்தனே, உள்ளம் கொடியார் - தீய நெஞ்சமுடையராய், உயிர்க் கொலை காதலர் - பிறவுயிர்களைக் கொல்லுந் தொழிலை விரும்புவோரும், கொடியன மேவி - களவு வஞ்சம் கொலை முதலிய தீத் தொழிலைப் பொருந்தி, பிறன் பொருள் வெள்ளம் கொள்ளும் - பிறனுடைய பொருட் பெருக்கத்தைக் கவர்ந்து கொள்ளும், கொடுமைக் குணத்தின் மனித்தரும் - கொடிய குணத்தையுடைய மனிதர்களும், நரகம் அடைவார் - அந்த நரகங்களிலே வீழ்பவராவர், (எ - று.) மேலும், உயிர்க் கொலை செய்வோரும் பிறன்பொருள் வெஃகுவோரும் கொடுமைக் குணமுடையோரும் அந்நரகப் பிறப் பெய்துவர் என்றார் என்க. | (842) | | |
|
|