1953. | நல்லறங் காய்ந்து நலிந்து பொருள்படைத் தில்லறஞ் செய்யா திறுகு பவர்களும் புல்லறம் புல்லாப் புலவரை வைதுரைத் தல்லறஞ் செய்யு மறிவில் லவரும் | (இ - ள்.) நல்லறம் காய்ந்து - உயரிய அறச்செயல்களை வெறுத்து, நலிந்து பொருள் படைத்து - பிறவுயிர்கட்கு இன்னா செய்தும் தம்முடம்பு செற்றும் அதன்வழிப் பொருள் ஈட்டி, இல்லறம் செய்யாது - இல்லறத்தார்க்குரிய அறங்களையும் செய்யாதவராய், இறுகுமவர்களும் - உலோபத்தால் வலிந்த மனத்தை யுடையோரும், புல்லறம் புல்லாப் புலவரை - மற்நெறிச் செல்லாத அறிஞரை, வைதுரைத்து - வசைபேசி, அல்லறம் செய்யும் - தீவினையே செய்கின்ற, அறிவில்லவரும் - பேதைகளும், (எ - று.) மறநெறியிலே பொருளீட்டுவோரும் அறஞ்செய்யாக் கயவரும் புலவரை வைவோரும் அல்லறஞ் செய்யும் அறிவிலிகளும் (நரக கதி எய்துவர்) என்க. | (843) | | |
|
|