1954. | தெண்டிரை வாழுந் 1திமிலுங் கலங்களும் 2கொண்டிரை யாக வுயிர்கொல்லுஞ் சாதியும் 3கண்டிடு காதனை நின்னாற் செயப்படும் தண்டிக டம்மொடுஞ் சார்த்தினை கொண்ணீ. | (இ - ள்.) தெண்திரை வாழும் - தெளிந்த திரைகளையுடைய கடற்கரையிலே வாழ்கின்ற, திமிலும் - தோணிகளையும், கலங்களும் - பெரிய மரக்கலங்களையும், கொண்டு - கருவிகளாகக்கொண்டு, இரையாக - தமக்கும் பிறர்க்கும் இரையாகும் பொருட்டு, உயிர்கொல்லும் சாதியும் - நீர்வாழும் உயிர்களைக் கொல்லாநின்ற பரதவர் முதலிய வகுப்பினரையும், கண்டிடுகாதனை - சான்று முதலியவற்றால், ஆராய்ந்து காணப்பட்ட கொலை முதலியவற்றால் நின்னாற் செய்யப்படும், தண்டிகள் - அரசனாகிய நின்னால் முறை செய்து ஒறுக்கப்பட்டவர்களோடே, சார்த்தினை - கூட்டி, கொண்ணீ - அந்நரகில் வீழ்வோராக நீ கொள்வாயாக, (எ - று.) காதனை - கொலை. திமில் முதலியவற்றால் மீன் முதலியவற்றைக் கொல்வோரும் அரசராற் றண்டனை பெறற்குரிய கொலைஞரும் நரகில் வீழ்வார் என்க. | (844) | | |
|
|