1965. | வலிய முழங்கினு நாறினும் வட்கி நலியு 1மிவையென நையு மொருபால் பலிபெறு தெய்வங்கண் மேலிட்டுப் பாற்றும் கலியவர் கையுட் கழியு மொருபால். | (இ - ள்.) வலிய - தம்மின் வலிய விலங்குகள், முழங்கினும் - முழங்குதலைக் கேட்டவிடத்தும், நாறினும் - தோன்றுதலைக் கண்டவிடத்தும், வடகி - ஒளி குன்றி, இவை நலியும் என - இவ்விலங்குகள் நம்மைக் கொல்லுமே என்று, ஒருபால் - ஒருசார், நையும் - துன்புழக்கும், பலிபெறும் தெய்வங்கள் மேலிட்டு - உயிர்ப்பலிகொள்ளும் தெய்வங்களைத் தலைக்கீடாகக் கொண்டு, பாற்றும் - உயிர்போக்கும், கலியவர் - துன்பஞ் செய்வோருடைய, கையுட் கழியும் ஒருபால் - கைகளிலே அகப்பட்டிறந் தொழியும் ஒரு பக்கத்தே, (எ - று.) நாறுதல் - தோன்றுதல். இனி, நாறுதல் - மணம் வீசுதல் என்று கொண்டு, வலிய விலங்குகளின் நாற்றத்தை நுகர்ந்த விடத்தும் எனினுமாம். வலிய விலங்குகளானும் எளியன கொல்லப்படும்; தெய்வத்தின் மேலிட்டும் அறிவிலிகளாற் கொல்லப்படும் என்க. | (855) | | |
|
|