மக்கட்கதித் துன்பம்
மக்கட்பிறப்பின் வகை

1971. மாக மழைவண்கை மன்னவ மக்களும்
மேக கதியின 2ரேய விகற்பினர்
சேகர் மிலைச்சர் மனிதர்க டிப்பியர்
போக மனித ரெனப்பொருட் பட்டார்.

     (இ - ள்.) மாகம் மழை வண்கை மன்னவ - வான்கண்ணதாகிய முகில் போலும்
கைம்மாறு கருதாத வள்ளன்மையுடைய பயாபதி வேந்தே, மக்களும் - மனிதர்கள்
எல்லோரும், ஏக கதியினர் - பிறப்பானே ஒரே தன்மையுடைய ராயினும், ஏய - இசைந்த,
விகற்பினர், - வேற்றுமையுடையோர் ஆவர், சேகர் மிலைச்சர் மனிதர்கள் திப்பியர்
போகமனிதர் என - அவ்வேற்றுமை யுடையோர் சேகர் என்றும் மிலைச்சர் என்றும் மனிதர்
என்றும் திப்பியர் என்றும் போகமனிதர் என்றும் கூறப்படுகின்ற, பொருட்பட்டார் -
சொற்களுக்குப் பொருளாகப் பொருந்திய ஐவகையினருமாம், (எ - று.)

     “நல்லவர் தீயவர் திப்பியர் ஒப்பில் குமானுயரோ
     டல்ல வருள்ளுறுத் தாடவர் ஐவருளர்Ó
என்றார் நீலகேசியினும் (தருமவுரைச். 82)

     மனிதருள்ளும் ஐவகைய ருளர் என்க.

(861)