1975. | மக்கட் பிறப்பெனு மாத்திர மல்லது மிக்க வெளிற்று விலங்குக ளேயவர் நக்க வுருவினர் நாணா வொழுக்கினர் தொக்கனர் மண்ணே துளைத்துண்டு வாழ்வார். | (இ - ள்.) மக்கட் பிறப்பெனும் மாத்திரம் அல்லது - மக்கட் பிறப்புடையோர் என்னுந்துணையே அன்றி, அவர் - அக் குமானுயர் என்னும் மிலைச்சர்கள், வெளிற்று விலங்குகளே - அறிவற்ற விலங்கே, நக்க உருவினர் - ஆடையில்லாத உருவத்தையுடையோராய், நாணா வொழுக்கினர் - நாணமற்ற தீயொழுக்கமுடையோராய், தொக்கனர் - கூட்டமாய்க் கூடி, மண்ணே துளைத்துண்டு வாழ்வார் - மண்ணைத் தோண்டித் தின்று வாழாநின்றனர், (எ - று.) நக்கவுரு - ஆடையில்லாத உருவம். குமானுயரும் ஒருவகை விலங்கென்றே கொள்க என்பதாம், | (865) | | |
|
|