(இ - ள்.) தேச மிலைச்சரில் சேர்வுடை யாரவர் - தேயத்தில் வாழும் இயல்புடைய மிலைச்சர், மாசில் மனித வடிவினர் ஆயினும் - குற்றமற்ற மக்கள் வடிவமே உடையர் எனினும், கூசுஇன் மனத்தர் - நாணம் இல்லாத மனம் உடையோர், கொடுந் தொழில் வாழ்க்கையர் - கொடிய தீத்தொழிலையே செய்து உயிர் வாழ்வோர், நீசர் - கயமையுடையோர், அவரையும் - ஆதலின் அம் மிலைச்சரையும், நீரின் - மக்கட் பண்பின், இழிப்பாம் - சேர்க்காமல் விலங்குகள் என்றே கொள்வோம், (எ - று.) தேச மிலைச்சரும் கூசின் மனத்தரும் கொடுந்தொழிலருமாகிய நீசராகலின் அவரும் விலங்கே என்க. |