1978. | கூடன் மிலைச்சர் 1குமானுட ரென்றிவர் ஏடவிழ் தாரோ யெவரா பவரெனில் கோடிக் குதர்க்க முரைத்துக் குணங்களை நாடினர் கொள்ளா நலமி லவரும். | (இ - ள்.) கூடல் மிலைச்சர் - தேசத்தினுட் கூட்டங் கூட்டமாய்க் கூடி வாழ்வோராகிய மிலைச்சரும், குமானுயர் - தீவினுள் வாழும் குமனிதர் என்னும் மிலைச்சரும், ஆபவர் எவர் எனில் - ஆகித் தோன்றுபவர் யாரோ என்று வினவின், ஏடவிழ் தாரோய் - இதழ் விரிக்கும் மலர் மாலையணிந்த மன்னனே, கோடி - மனம் கோணி, குதர்க்கம் உரைத்து - மாறுபட்ட வெளிறு பேசி, குணங்களை நாடினர் கொள்ளா - பயன்மிக்க நற்குணங்களை ஆராய்ந்து மேற்கொள்ளாத, நலமிலவரும் - நன்மையில்லாதவரும், (எ - று.) மிலைச்சராய்ப் பிறப்போர் குதர்க்கம் உரைத்துக் குணங்கொள்ளா நலமிலவரும்,என்க. நலமிலவரும், ஆங்கவர் ஆபவர் (1980 இல்) என்று முடிவுறும். | (868) | | |
|
|