1979. | அடங்கா மரபி னவர்கட் கடங்கார் விடங்கார் மணந்த விடக்கும் பிறவும் உடங்காய்ந் துணக்கொடுப் பாரு முயர்ந்தோர் தொடங்கா வினைக டொடங்கு மவரும். | (இ - ள்.) அடங்கா மரபினவர்கட்கு - தம்பால் அடக்கமிலாத முறையையுடைய தம் பகைவர்க்கு, அடங்கார் - பகைவராயினார், கார் விடம் மணந்த - கரிய நஞ்சு கலந்த, விடக்கும் பிறவும் - ஊன் உணவு முதலியவற்றை, உடங்கு ஆய்ந்து - வஞ்சத்தால் இவருடன் கூடி அமய முதலியவற்றை ஆராய்ந்து, உணக்கொடுப்பாரும் - அவருண்ணும்படி கொடுப்பவர்களும், உயர்ந்தோர் தொடங்கா வினைகள்- சான்றோரால்பழித்தொதுக்கப்பட்ட தீவினைகளை, தொடங்குமவரும் - செய்வோரும், (எ - று.) நலமில்லவரும் (1978) அஞ்சு கலந்துண்பித்தோரும் உயர்ந்தோர் விலக்கியவற்றைச் செய்வோரும் என்று கூட்டுக. | ( 869 ) | | |
|
|