1981.

மக்கள் 2வதியு மிரண்டரைத் தீவினுள்
தக்க நிலத்துப் பிறந்தவர் தம்முளும்
முக்குலத் தாரொடுங் கூடா முயற்சியர்
3ஒக்கலைப் போல்வார் பலரு முளரே.
 
     (இ - ள்.) மக்கள் வதியும் இரண்டரைத் தீவினுள் - மனிதர் வாழ்தற்குரிய
இரண்டரைத் தீவுகளிலும், தக்க நிலத்து - சிறந்த நாடுகளிலே, பிறந்தவர் தம்முளும் -
பிறந்த மனிதருள்ளும், முக்குலத்தாரொடு கூடா முயற்சியர் (சேகரும் மிலைச்சரும் ஒழிந்த
மனிதரும் திப்பியரும் போகரும் ஆகிய) மூன்று குலத்தினுட் டோன்றியும், அவர்தம்
ஒழுக்கத்தோடு பொருந்தாத தீச் செயலை உடையராய், ஒக்கலைப் போல்வர் - பிறப்பானும்
தோற்றத்தானும் மட்டுமே அவர்க் கினம் போன்றவராய், பலரும் உளர் - பற்பலர் இருப்பர், (எ - று.)
    இரண்டரைத் தீவுகளாவன:- சம்புத் தீவும், தாதகீடண்டத் தீவும் புட்கரத்தீவிற் பாதியுமாம்.

     “மக்களே போல்வர் கயவர் அவரன்ன
     ஒப்பாரி யாங்கண்ட தில்.Ó

     என்னுந் திருக்குறளை ஒப்பு நோக்குக.

( 871 )