முயற்சி துணிதிறம் | 1991. | துன்னு முயற்சி துணியுந் திறமவை பன்னி யுரைப்பிற் பலவாய்ப் பெருகினும் தன்னிய றானந் தவமொடு பூசனை என்னுமிந் நான்கென வெண்ணி யுணர்நீ. | (இ - ள்.) துன்னும் முயற்சி துணியும் திறம் அவை - கற்ப உலகங்களிலே செல்லுதற்குரிய நற்செயல்களைத் தெளிந்து கொள்ளும் முறைகளை, பன்னி உரைப்பில் - ஆராய்ந்து கூறின், பலவாயப் பெருகினும் - பலபட விரியுமாயினும். (சுருங்கக்கூறுமிடத்தே), தன் இயல் தானம் தவமொடு பூசனை என்னும் - தானமும் தவமும் பூசனையும் தன்னியலும் என்று கூறப்படுகின்ற, இந்நான்கு என - இந்த நான்கு முயற்சிகளுமே என்று, எண்ணி உணர்நீ - நீ ஆராய்ந்து அறிவாயாக, (எ - று.) தன்னியல் - உயிரின் இயல்பாகிய, சீலம்; தானம் சீலம் தவம் பூசனை என எண்ணுவதே முறையாயினும், செய்யுளாகலின் அம்முறை பிறழ்ந்து தன்னியல் முன்னர் வைக்கப்பட்டது. “நற்றானம் சீலம் நடுங்காத்தவம் அறிவர் சிறப்பு இந்நான்கும் மற்றாங்குச் சொன்ன மனைவியர்Ó என்றார் சிந்தாமணியிலும். | (881) | | |
|
|