தானத்தினியல்பு

1992.

தலையு மிடையுங் 1கடையுமாச் சாற்றும்
நிலைமைய தான நிழன்மணிப் பூணோய்
2உலைவிலேற் போனுட னீபவ னீயும்
மலைவில் பொருளின்ன மாட்சிய மன்னா.

     (இ - ள்.) நிழல்மணிப் பூணோய் - ஒளியையுடைய மணி யணிகலனையுடையவனான,
மன்னா - அரசனே!, தானம் - தானங்கள் என்பன, உலைவில் ஏற்போன் உடன் -
துன்பத்தாலே இரப்பவனோடு, ஈபவன் - வழங்குவோனும், ஈயும் மலைவுஇல் பொருள் -
ஈதற்குரிய குற்றமற்ற பொருளும் என்னும், இன்ன மாட்சிய - இத்தகைய மூன்றானும்
மாண்புடையவாய், தலையும் இடையும் கடையுமா - தலையயாய தானம் இடையாய தானம்
கடையாய தானம் என்று மூன்று வகையவாக, சாற்றும் நிலைமைய - கூறப்படும்
தன்மையுடையன, (எ - று.)

     அந்நான்கனுள் தானம் என்பது தலையிடைகடை எனும் முத்திறத்துடன் ஏற்போன்
ஈபவன் பொருள் என்னும் மூன்று பகுதியினையும் உடைய தென்க.

(882)