ஞான வொழுக்கம் (சீலம்) | 1996. | தானு மடங்கி யடங்கினர்க் கேந்திய ஊன முயிர்களுக் கெல்லா முணர்வது ஞான வொழுக்கம் பெருகு 1நலத்ததை ஈனமி 2லின்ப நிலங்கட்கு வித்தே. | (இ - ள்.) தானும் அடங்கி - தானும் பொறிகளின் வலிமையை வாட்டி அடக்கமுடையவனாகி, அடங்கினர்க்கு ஏந்திய - அடக்கம் உடையவர்கட்கு மேற்கொள்ளத் தக்கவைகளையும், உயிர்கட்கு ஊனம் - உயிர்கட்குப் பிறத்தல் முதலிய துயரங்கட்குக் காரணமான குற்றங்களையும், எல்லாம் - இன்னோரன்ன எல்லாவற்றையும், உணர்வது - ஐயந்திரிபின்றி உணர்ந்து கோடல், ஞானவொழுக்கம் - அறிவொழுக்கம் எனப்படும், பெருகும் நலத்ததை - மிக்க நன்மையுடைய இவ்வறிவொழுக்கம், ஈனமில் இன்ப நிலங்கட்கு - குற்றமற்ற இன்ப உலகங்களாகிய கற்ப உலகங்களில் சென்று இன்புறுதற்கு, வித்தே - விதையாகும், (எ - று.) “ஓர்த்தற் றெளிவொடு ஒழுக்கம் இவையுண்டார் பேர்த்தப் பிணியுட் பிறவார் பெரிது இன்பமுற்றேÓ - நீலகேசி. தானும் அடங்குதலாவது:- தன் மனம் மொழி மெய்கள் தீநெறிக்கட் செல்லாது அடங்குதலுடையதனால். இவ்வடக்க முடைமை “ஈனமிலின்ப நிலங்கட்கு வித்’ தாதலை “அடக்கம் அமரருள் உய்க்கும்Ó என்னும் வள்ளுவர் பொன்மொழியானும் உணர்க. நலத்ததை, என்பதன் கண்ணுள்ள, ஐ : சாரியை. | (886) | | |
|
|