இதுவுமது

1999.

தன்கைப் பொருளு மிழந்து தனக்கொரு
புன்கட் கதிசெல்லும் வாயில் புணர்ப்பவன்
வன்கட் 1பதகர்க்கு வான்பொருள் கைக்கொடுத்
தென்கைப் பிணகொண்மி னென்பவ னொத்தான்.
 
     (இ - ள்.) தன் கைப்பொருளும் இழந்து - தன்னுடைய கையகத்துள்ள பொருளையும் இழப்பதுமட்டும் அன்றி, தனக்கொரு புன்கதி செல்லும்வாயில் புணர்ப்பவன் - தான் எய்தி வருந்துதற்குரிய இழிந்த பிறப்பிலே புகுதற்குரிய வழிதேடிக்கொள்வானொருவன், வன்கண் பதகர்க்கு - தறுகண்மையுடைய தீவினையாளர்களுக்கு, வான்பொருள் கைக்கொடுத்து - உயரிய பொருளையும் வழங்கி, என் கைப்பணி கொண்மின் - என்னை அடிமையாய்க்கொண்டு என் பணியையும் ஏற்றுக்கொள்ளுங்கோள், என்பவன் ஒத்தான் - என்று கூறும் ஒருவனை ஒத்தவனாவான், (எ - று.)

     தன் கைப்பொருளையும் அடங்கலர்க்குத் தானங் கொடுத்திழத்த லோடன்றி, தீப்பிறப்பினும் புகுவன், தன்பொருளைக் கொடுத்துப் பிறர்க்கு அடிமை புகுபவனை ஒப்பான் என்றபடி.

(889)