நெய்தல் | 20. | கோடு டைந்தன தாழையுங் கோழிருள் மோடு டைந்தன மூரிக் குவளையும் தோடு டைந்தன 2சூகமுங் கற்பகக் காடு டைந்தன போன்றுள கானலே | (இ - ள்.) கோடு உடைந்து அன தாழையும் - சங்கு உடைபட்டாற் போன்று மலர்ந்த தாழைமலர்களும்; கோழ் இருள் மோடு உடைந்து அன - மிகுந்த இருளின் திரள் உடைந்து சிதறினாற்போன்று மலர்ந்த; மூரிகுவளையும் - பரிய கரிங்குவளை மலர்களும்; தோடு உடைந்தன - இதழ் அவிழ்ந்தனவான; சூகமும்-மற்றைய நீர்ப்பூக்களும்; என்னும் இவற்றால்; கானல்-கடற்கரைச் சோலைகள்; கற்பகம் காடு உடைந்தன போன்றுஉள-விண்ணுலகிலுள்ள கற்பகச்சோலைகள் மலர்ந்தன போன்று விளங்கலாயின. (எ - று.) “சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லாலே“ என்பர். மந்திரசாலைச் சருக்கத்துள். கோடு-யானைக்கோடுமாம். சூகம்-ஒரு நெய்தனிலப்பூவுமாம்..நெய்தல்நிலத்திலே தாழைமலர் குவளைமலர் மற்றைய நீர்ப்பூக்கள் ஆகியன மலர்ந்து கடற்கரைச் சோலைகள் கற்பகச்சோலை மலர்ந்தாற் போன்று விளங்குகின்றன என்றார். கோழ் இருள்-கொழுவியஇருள்; மிகுந்த இருள்; கொழுமை என்னும் பண்புப்பெயர் ஈறுபோய் ஆதி நீண்டு இடையுகரமுங்கெட்டுக் கோழென நின்றது. | ( 20 ) | | |
|
|