துறவியர்க்கீந்த தானப் பயன். | 2000. | ஒத்த குணங்க ளமைந்தாங் குறுவர்க்குத் தத்துவந் தேறி யவன்செய்த 2தானங்கள் முத்திறத் துள்ளும் படாது முடிமன்ன உத்தம தேவரு ளுய்க்கு முணர்நீ. | (இ - ள்.) ஒத்த குணங்கள் அமைந்து - தானம் செய்வோர்க்குப் பொருந்திய எல்லாக்குணங்களும் நன்கு அமையப்பெற்று, தத்துவம் தேறியவன் - மெய்யுணர்ந்த ஒருவனால், உறுவர்க்கு - துறவிகளுக்கு, செய்த தானங்கள் - வழங்கப்பட்ட தானச்செயல்கள், முத்திறத்துள்ளும் படாது - செய்தவனை விலங்கும் நரகரும் மக்களுமாகிய மூவகைப் பிறப்பினுள்ளும் செல்லாதவாறு செய்து, உத்தம தேவருள் உய்க்கும் - உயரிய தேவப் பிறப்பினுள்ளே செலுத்தா நிற்கும், முடிமன்ன நீ உணர் - முடியணிந்த மன்னனே! நீ இதனை உணர்க, (எ - று.) “உதவி வரைத்தன் றுதவி யுதவி செயப்பட்டார் சால்பின் வரைத்துÓ என்னும் திருக்குறட் கருத்தையும் ஈண்டுக் கருதுக. முத்திறம் - கர்ப்பம், உபவாதம் சம்மூர்ச்சனம் என்பனவுமாம் | (890) | | |
|
|