கொல்லா விரதத்தின் சிறப்பு | 2002. | எல்லா விரத மியல்பொக்கு மாயினும் அல்லா விரத மனையா 6யவர்கட்குக் கொல்லா விரதங் குடைமன்ன 7வாமெனின் வெல்லா வகையில்லை வீங்கெழிற் றோளாய். | (இ - ள்.) எல்லா விரதம் இயல்பு ஒக்குமாயினும் - இவ்வாறு கூறப்பட்ட விரதங்கள் எல்லாம் நன்மையளிப்பதில் ஒத்த தன்மையுடையவே ஆயினும், விரதம் அல்லா - விரதங்கள் அனைத்தையும் ஒருங்காற்றும் ஆற்றல் இல்லாத, மனையாயவர்கட்கு - இல்லறத்தார்க்கும், வீங்கெழிற்றோளாய் குடை மன்ன! - பருத்த அழகிய தோளை யுடையவனான வெண்குண்டைவேந்தனே, கொல்லாவிரதம் ஆம் எனின் - கொல்லாமை என்னும் விரதம் ஒன்றையேனும் குறிக்கொண்டு மேற்கோடல் ஆகுமாயின், வெல்லா வகையில்லை - அவ்வில்லறத்தார் வென்றொழிக்க வியலாத தீவினை வேறு பிற இல்லை, (எ - று.) எல்லா விரதமும் என்றதன் கண் உம்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. “ஒன்றாக நல்லது கொல்லாமைÓ, “கொல்லா நலத்தது நோன்மை’. “கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் றலைÓ என்னும் பொன் மொழிகளானும் கொல்லா விரதத்தின் பெருமையை உணர்ந்து கொள்க. | (892) | | |
|
|