எழுவகை அறவாயில்கள் | 2008. | அருளுந் தெருளுங் குணத்தின்க ணார்வமும் பொருளொன்று 1சேரும் புகழ்ச்சி 2நிகழ்வும் 3மருளி றவமும் வாலிய ஞானமும் 4இருளறு தியான நிகழ்வுமென் றேழே. | (இ - ள்.) அருளும் - அருளுடைமையும், தெருளும் - அறிவுடைமையும், குணத்தின்கண் ஆர்வமும் -உயரிய குணங்களை விழைதலும், பொருள் ஒன்று சேரும் புகழ்ச்சி நிகழ்வும் - மெய்யுணர்ச்சி உண்டாதற்குரிய புகழ்ச்சி நிகழ்வும், மருள் இல் தவமும் - அறியாமையில்லாத தவமும், வாலிய ஞானமும் - தூய்தாகிய அறிவும், இருள் அறு தியான நிகழ்வும் - மயக்கம் அறுதற்குரிய தியான நிகழ்வும், என்று ஏழே - என்று ஏழு வாயில்களும் வேறுள்ளன, (எ - று.) முன்னர்க் கூறிய நான்கேயன்றி அருள் முதலிய இவ்வேழும் அற வாயில்களாம் என்க. | (898) | | |
|
|