தெருளின் திறம் | 2010. | வையினும் வாழ்த்தினும் வாளா விருப்பினும் வெய்ய 1முனிதல் குளிர்தல் வெறுப்பொடு மையன்மும் 2மூடப் பகுதி மயக்கின்மை செய்ய மனத்தோர் 3தெருளின் றிறமே. | (இ - ள்.) வையினும் - பிறர் தம்மை வசைகூறிய போதும், வாழ்த்தினும் - அன்றிப் புகழ்ந்து வாழ்த்தியபோதும், வாளா விருப்பினும் - இரண்டுமன்றி வாளாவிருக்கும்போதும், வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு முறையே வெவ்வியவாகச் சினத்தலும் மகிழ்தலும் வெறுத்தலும் ஆகிய இம்மூன்றோடும், மையல் -மயக்கமின்மையும், மும்மூடப்பகுதி மயக்கு இன்மை - மூன்று மூடப்பகுதிகளால் மயக்கப்படாமையும், செய்ய மனத்தோர் - செம்மையுடைய நெஞ்சுடைய சான்றோர்களுக்குரிய, தெருளின்திறம் - தெருள் என்பதன் தன்மையாம், (எ - று.) மையல் - மோகவனீயகர்மங்கள். மும்மூடப் பகுதி :- உலக மூடம் பாசண்டிமூடம் தேவமூடம் என்பன. பிறர் தம்மை வைத விடத்தும் வாழ்த்திய விடத்தும் நிரலே விருப்பும் வெறுப்புமின்றி நெஞ்சம் சமனிலையினிற்றலும் மயக்கின்மையும், மும்மூடப் பகுதியின்மையும் தெருள் எனப்படும் என்க. | (900) | | |
|
|