புகழ்ச்சி நிகழ்வு | 2012. | ஆற்றல் வகையா லருந்தவ மேற்கொண்டு நோற்று நுனித்த லொழுக்கந் தலைநிற்றல் போற்றி யுரைத்தல் புகழ்ச்சி 1நிகழ்விஃ தேற்று மிருவிசும் பீர்மலர்த் தாரோய். | (இ - ள்.) ஆற்றல் வகையால் - தவம் ஆற்றுதற்கென ஆகமத்திற் கூறப்பட்ட வகையாலே, அருந்தவம் மேற்கொண்டு - செயற்கருந் தவவொழுக்கத்தை மேற்கொண்டு, நோற்று - நோன்பாற்றி, நுனித்தல் - மெய்யுணர்தலும், ஒழுக்கந்தலைநிற்றல் - நல்லொழுக்கத்தில் வழுவாது நிலைத்தலும், போற்றி உரைத்தல் - தோத்திரபாகுடத்துட் கூறுமாற்றானே இறைவனைப் புகழ்ந்து பாடுதலும் ஆகிய இவைகள், புகழ்ச்சி நிகழ்வு இஃது - இப்புகழ்ச்சி நிகழ்வுடைமை யானது, ஈர்மலர்த்தாரோய் - ஈரமுடைய மலர்மாலையணிந்த மன்னனே, இருவிசும்பு ஏற்றும் - அமரருள் உய்க்கும், (எ - று.) தம் மாற்றற்கேற்ற வகையானே தவவொழுக்கை மேற்கொண்டு நோற்றலும் மெய்யுணர்தலும் ஒழுக்கமுடைமையும் கடவுள் வழிபாடு செய்தலும் புகழ்ச்சி நிகழ்வாம் என்க. | (902) | | |
|
|