மெய்யறிவு | 2014. | நூற்பொருள் கேட்டு நுனித்தோ 1ருணர்வது மாற்படை கூட்டு மயங்கிரு டீர்ப்பது மேற்படை மெய்ம்மை விளக்கும் விளக்கது நாற்படை யோய்நல்ல ஞான நிகழ்வே. | (இ - ள்.) நாற்படையோய் - நான்குவகைப் படைகளையும் உடைய வேந்தனே, ஞானநிகழ்வே - ஞானநிகழ்வு என்று சொல்லப்படுவது யாதெனில், நூற்பொருள் கேட்டு - மெய்ந்நூலாகிய பரமாகமத்தில் அருகனாற் கூறப்பட்ட மெய்ப்பொருளை நல்லாசிரியர்பால் கேட்டறிந்து, நுனித்தோர் - ஆராய்ந்த சான்றோரால், உணர்வது - தெளியப்படுவது, மால்படை கூட்டும் மயங்கு இருள் தீர்ப்பது - பெரிய இன்னல்களைக் கூட்டுகின்ற மயங்குதற்கு ஏதுவாகிய அறியாமை இருளை அகற்றுவது, மேற்படை மெய்ம்மை விளக்கும் விளக்கது - மேம்பாடுடைய செம்பொருளைக் காட்டும் விளக்குப் போன்றது, (எ - று.) மெய்ப்பொருள் கேட்டு நுனித்தோர் உணர்வது, மயக்கு அகற்றுவது ; மெய்ம்மை விளக்குவது ; ஞான நிகழ்வாம் என்க. | (904) | | |
|
|