2016. | போற்றிய புண்ணியப் பொற்சுண்ண முன்புகழ் வாற்றி முயல்வார்க் 1ககநிகழ் வாமவை மாற்றிய வற்றை மறுதலை யாக்கொளிற் பாற்றி யுழப்பிக்கும் பாக நிகழ்வே. | (இ - ள்.) போற்றிய - சான்றோர்களாற் போற்றப்பட்டனவும், முன்புகழ்வு - முன்னர் எம்மாற் புகழ்ந்து கூறப்பட்டனவுமாகிய, புண்ணியப் பொற்சுண்ணம் - பத்துவகை அறமாகிய பொற்சுண்ணம் என்னும் மணப்பொடியை, ஆற்றி - அணிந்து கொண்டவராய், முயல்வார்க்கு தரும சுக்கிலத்தியானங்களிலே முயல்கின்றவர்க்கு, அகநிகழ்வாம் - அம்முயற்சி வீட்டினகத்தே தம்மைச் செலுத்தும் தவநிகழ்ச்சியாம், மாற்றி - அம்முயற்சிக்கு மாறுபட்டு, அவற்றை மறுதலையாக்கொளின் - அத்தியானத்தின் மறுதலையாகிய ஆர்த்த ரௌத்திரத்தியானங்களை மேற்கொண்டால், பாற்றி - பிறவிகளிலே விழும்படி செய்து, உழப்பிக்கும் - இன்னலுறுத்தும், பாக நிகழ்வே - பிரவிருத்தி நிகழ்ச்சியாகும், (எ - று.) (பாடம்) 1 ககமகிழ். அக நிகழ்வு நிவிருத்தி மார்க்கம் - பாக நிகழ்வு - பிரவிருத்தி மார்க்கம். தசவித தருமத்தைப் பொற்சுண்ணமாக உருவகித்தார் - இங்ஙனமே மேருமந்தரபுராணமுடையாரும். “அழுக்கிலா மாதவச் சாந்துமட்டியா“ என்புழி, பன்னிருவகைத் தவத்தையும் சாந்தமாக உருவகித்தமை காண்க. | (906) | | |
|
|