நற்காட்சி, நல்லொழுக்கமாகிய தியானங்கள் | 2017. | காட்சி யெனும்பெயர்க் கதிர்விளக் 1கேற்றிய மாட்சி யுடையார் வதமில ராயினும் ஆட்சி கரிதன் றமருல கல்லது மீட்சியில் பேரின்ப வெள்ளத் துழவே. | (இ - ள்.) காட்சி எனும் பெயர் -நற்காட்சி என்று சொல்லப்படுகின்ற, கதிர் விளக்கு ஏற்றிய - ஒளியுடைய விளக்கைத் தம் உள்ளத்தே ஏற்றிக்கொண்ட, மாட்சியுடையார் - மாட்சியுடைய சான்றோர், வதம் இலராயினும் - விரதங்களை மேற்கொள்ளாவிடத்தும், அமருலகு ஆட்சிக்கு அரிதன்று - இவர்கள் வானுலகத்தை ஆளுதல் எளிதேயாம், அல்லது - அல்லாத சுக்லத்தியானம், மீட்சியில் - மீண்டு வருதலில்லாத, பேரின்ப வெள்ளத்து உழவு - பேரின்பமாகிய வீட்டின்பத்தை நுகர்விக்கும், (எ - று.) அமரர் - அமர், எனக் கடைகுறைந்து நின்றது. காட்சி - ஸம்யக் தரிசனம். | (907) | | |
|
|