தியானத்தின் சிறப்பு

2018.

மெய்ப்பொரு டேறுதல் காட்சி 2விளக்கது
3செய்ப்படு மாயின் வினையென்னுந் தீயிருள்
அப்படி மானு 4நிலையன் றதனைநின்
கைப்பொரு ளாக்கொள் கதிர்மணிப் பூணோய்.
 
     (இ - ள்.) மெய்ப்பொருள் தேறுதல் காட்சி விளக்கது - இறைவன் முதலிய
பொருள்கள் எட்டையும் அளவைகளான் ஆராய்ந்து தெளிதலே காட்சி என்னும் விளக்காம்,
அது செய்ப்படுமாயின் - அவ்வாராய்ந்து தெளிதல் என்னும் நற்காட்சி
மேற்கொள்ளப்பட்டால், வினையென்னும் தீயிருள் - அறியாமையான் வரும் வினை என்னும் கொடிய இருள், அப்படி மானும் நிலையன்று - அது நிலையிலே பொருந்துவ தன்றாய்க் கழிவதாம், அதனை - ஆதலின் அந்நற்காட்சியை, கதிர்மணிப் பூணோய் - சுடருடைய மணி அணிகலன்களையுடையோனே, நின்கைப் பொருளாக்கொள் - உன்னுடைய கைப்பொருளைப் பேணுமாப்போலே பேணிக்கொள், (எ - று.)

     இறைவன் முதலிய எண் பொருள் ஆவன :- இறைவன், மெய்ந்நூல் பொருள்,
அளவை, பிரவர்த்தி, லிங்கம், சாரித்திரம், பலம் என்பன. மானுதல் - பொருந்துதல்.

     தியானம் என்னும் விளக்கின்முன் வினையிருள் பொருந்தி நிற்றல் செல்லாதென்பதாம்

(908)