தெய்வ மனிதர் ஆவார் இவர் எனல் | 2019. | தெய்வ 1மனித ரவரைத் தெளிவுறின் ஐய விசயனு மாழி வலவனும் எய்த விவர்முத லீரொன் பதின்மரிவ் வைய மருள 2வருந ருளரே. | (இ - ள்.) ஐய - ஐயனே, தெய்வ மனிதரவரைத் தெளிவுறின் - இனி, திப்பிய மனிதர்களை ஆறிய வேண்டின், விசயனும் ஆழிவலவனும் இவர் முதல் எய்த - விசயனும் திவிட்டனும் முதல்வராக அமைந்த, ஈரொன்பதின்மர் - பதினெண்மராவர், இவ்வையம் அருள வருநர் உளர் - மேலும் இவரன்னோர் இவ்வுலகத்தைக் காக்கும் பொருட்டு வருவாரும் உளராவார், (எ - று.) திவிட்டன் முதலிய வாசுதேவர் ஒன்பதின்மரும், விசயன் முதலிய பலதேவர் ஒன்பதின்மரும் இன்னோரன்ன பிறரும், தெய்வ மனிதர் என்றபடி. “திவிட்டன், திவிப்பிரட்டன், சுயம்பு, புருடோத்தமன், புருடசிம்மன், புருடவரன், புண்டரீகன், இலக்குவன், கிருட்டினன், இவ்வொன்பதின்மரும் வாசுதேவர் எனப்படுவர். விசயன், அசலன், தருமன், சுப்பிரபன், சுதரிசனன், நந்தி, நந்தி மித்திரன், இராமன், பத்மன் இவ் வொன்பதின்மரும் பலதேவர் எனப்படுவர். | (909) | | |
|
|