2021. | தேய வினைவவெல்லுந் தெய்வ மனிசருள் நீயு மொருவனை நின்குலத் தாதிக்கட் பாய விழுச்சீர்ப் பரதனை யுள்ளுறுத் தாய திகிரி யவரு மவரே. | (இ - ள்.) தேயவினை வெல்லும் - தேய்ந்திறும்படி இரு வினைகளையும் வெல்லும் இயல்புடைய, தெய்வமனிசருள் - திப்பியருள்ளே, நீயும் ஒருவனை - பயாபதிமன்னனே நீயும் ஒருவனாவாய், நின் குலத்து - உன்னுடைய மரபின், ஆதிக்கண் - தொடக்க காலத்தே தோன்றிய, பாய விழுச்சீர்ப் பரதனை - பரவிய சிறந்த புகழையுடைய பரதனை, உள்ளுறுத்து - உள்ளிட்ட, ஆய திகிரியவரும் அவரே - தோன்றிய சக்கரவர்த்திகளும் திப்பியர்களே ஆவர், (எ - று.) “பரதன், சகரன், மகவான், சனத்குமாரன், சாந்திநாதன். குந்துநாதன், அரநாதன், சுபௌமன், பதுமன், அரிசேனன் செயசேனன், பிரமதத்தன் என்னும் இப்பன்னிரு சக்கரவர்த்திகளும் தெய்வ மனிதர் என்க. | (911) | | |
|
|