2027. | கொம்பழகு கொண்டகுழை நுண்ணிடை நுடங்க வம்பழகு கொண்டமணி மென்முலை வளர்ந்தாங் கம்பவழ வாயுளணி முள்ளெயி றிலங்கச் செம்பவள மேனியவள் கன்னிமை 1சிறந்தாள். | (இ - ள்.) கொம்பு அழகு கொண்ட குழை நுண்ணிடை நுடங்க - பூங்கொம்புபோன்ற அழகையுடைத்தாய் நுடங்கும் நுண்ணிடை துவளவும், வம்பு அழகுகொண்ட மணி மென்முலை வளர்ந்து - கச்சணிந்து அழகுமிக்க மணியணிகலன் பொருந்திய மெல்லிய முலை பருத்து, அம்பவழ வாயுள் - அழகிய பவளம் போன்ற செவ்வாயின்கண், அணிமுள் எயிறு இலங்க - நிரலாய் அமைந்த முட்போலும் கூரிய பல்வரிசை திகழ, செம் பவள மேனியவள் - செவ்விய பவழம் போன்ற நிறமுடைய அம்மகள், ஆங்கு - அப்பொழுது, கன்னிமை சிறந்தாள் - கன்னிப்பருவம் எய்திச் சிறந்து விளங்கினாள், (எ - று.) வம்பு - முலைக்கச்சு ; வம்பழகு - புதிய அழகு எனினுமாம். இடைநுடங்க முலை வளர்ந்தாங்கு எயிறிலங்க அவள் கன்னிமை சிறந்தாள் என்க. | (917) | | |
|
|