2072. | காட்சியு ஞானமுங் கதிர்த்துத் தன்பொறி மாட்சியை 1வெலீஇமனந் தூய னாயபின் நாட்செய்து நவிற்றிய தியான வீதியான் மீட்சியில் வீட்டுல கெய்தும் வீரனே. | (இ - ள்.) வீரனே - அரசனே!, காட்சியும் ஞானமும் கதிர்த்து - நற்காட்சியும் நன்ஞானமும் தோன்றி வலிபெற்று, தன் பொறி மாட்சியை வெலீஇ - தன் பொறிகளின் ஆற்றலை அடர்த்து வென்று அடக்கி, மனம் தூயன் ஆயபின் - நெஞ்சம் அவாவற்றுத் தூயனாய பின்னர், நாட்செய்து நவிற்றிய தியான வீதியான் - நாள் முதலிய காலத்தால் வரையறை செய்து கூறப்பட்ட தியானம் என்னும் வழியினாலே, மீட்சியில் விட்டுலகு எய்தும் - பிறப்பின்கண் மீளுதல் இல்லாத வீட்டுலகை அடைவான், (எ - று.) பிறவிச் சக்கரத்திற் பட்டு வருந்தி அதிற் றப்ப முயல்வோன், நற்காட்சி நன்ஞானம் முதலியவற்றாலே தன்பொறிகளை வென்று, மனம் தூய்மை யடைந்து தியானத்திலே பயின்று, மீட்சியில்லாத அவ்வீட்டினை எய்துவன் என்க. | ( 4 ) | | |
|
|