முத்திநிலை | 2073. | கடையிலெண் குணத்தது காம 2ராகர்கள் இடைநனி யிலாத 3தில் லியற்கை யில்லது மிடையொடு விழைவுவே ரறுத்த வீரர்கள் அடைவதோர் நிலைபிறர்க் கறிய லாகுமோ | (இ - ள்.) கடையில் எண்குணத்தது - கடையிலா ஞானம் முதலிய எண்குணங்களை யுடையதும், காம ராகர்கள் இடை நனியிலாதது - காம விழைவுகள் ஒருசிறிதும் இல்லாததும், இல் இயற்கை இல்லது - இல்லறத்தினின்று எய்தும் தன்மை யில்லாததும், மிடையொடு விழைவுவேர் - பற்றோடு அதற்குக் காரணமான அவாவினையும் வேரோடும், அறுத்த வீரர்கள் - அறச்செய்த பேராண்மையுடையவர்கள், அடைவது - எய்துவது மாகிய, ஓர் நிலை - ஒப்பற்ற நிலைமையை, பிறர்க்கு - அப் பேராண்மை யுடையாரல்லாத மற்றையோர்க்கு, அறியல் - உணர்ந்து கோடலும், ஆகுமோ - எளிதாகுமோ, (எ - று.) “ஆனாலும் அதன் பெருமை யார்க்கியார் சொல்வார் அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்“ என்றார் பிறரும். வீடுபேற்றுநிலை மெய்யறிவுச் செல்வர்கட்கன்றி மற்றையோர்க்கு எளிதில் அறிதற்கரியது என்றபடி. | (5) | | |
|
|