(இ - ள்.) இனி இருந்து இமைப்பதும் பெருமிகை என - இனி இந்நிலையிலேயே இருந்து இமைத்தல்தானும் பெரிதும் மிகையாய குற்றமாம் என்று கருதி, நமைப்பு உறு - துன்பம் பொருந்திய, பிறவிநோய் - பிறப்பாகிய நோய், நடுங்க - நோய் கொண்டு நடுங்கும்படி, நோற்கிய - நோன்பாற்றற்கு, அரசர் கோன் அருளினால் - மன்னர் மன்னனாகிய பயாபதியின் அருள் பெற்றவராய், அமைச்சரும் - அமைச்சர்களும், தம் சுமைப்பெரும் பாரத்தின் தொழுதி - தம்முடைய சுமையாகிய மிக்க பாரத்தின் திரட்சியை, நீக்கினார் - துறந்தார்கள், (எ - று.) தொழுதி - கூட்டம். நோற்கிய - நோற்க; செவ்விய என்னும் வாய் பாட்டெச்சம். பயாபதி மன்னன் தன் அமைச்சர்கள் துறவுபூண்பதும் தகுதியே என்னும் குறிப்புடையனாதலை அமைச்சர்கள் உணர்ந்துகொண்டு துறவு மேற்கொண்டனர் என்க. |