விசயதிவிட்டர்கள் நகரடைதல் | 2107. | திருவுடை யடிகடஞ் சிந்தைக் கேதமாம் பரிவொடு பன்னிநாம் பயிற்றி லென்றுதம் எரிவிடு சுடர்முடி யிலங்கத் தாழ்ந்துபோய் மருவுடை வளநகர் மன்னர் துன்னினார். | (இ - ள்.) திருவுடை அடிகள் தம் சிந்தைக்கு ஏதமாம் - வீட்டின்பமாகிய செல்வமுடைய அடிகளாரின் திருவுளத்திற்குக் குற்றமாய்த் தோன்றும், நாம் பரிவொடு பன்னிப் பயிற்றில் - யாம் எமக்குற்ற வருத்தத்தோடே பலபடப் பாரித்துப் பேசில், என்று - என்று கருதி, தம் எரிவிடு சுடர் முடி இலங்கத் தாழ்ந்து -தம் ஒளி விட்டுச் சுடர்கின்ற முடி திகழும்படி வணங்கி, போய் மருவுடை வளநகர் மன்னர் துன்னினார் - சென்று மணமிக்க தம் வளநகரத்தை அவ்வரசர்கள் அடைந்தனர், (எ - று.) செல்வம் எல்லாவற்றுள்ளும் சிறந்த மெய்யுணர்ச்சியாகிய செல்வம் உடையவன் ஆதலின் பயாபதி மன்னனைத் திருவுடை அடிகள் என்று விசயதிவிட்டர்கள் போற்றினர் என்க. | (39) | | |
|
|