2114. | தருக் 1கெயில் காப்பு வாங்கத் தடக்கைமால் பகடு நுந்தித் திருக்கிளர் 2குணமேற் சேடிச் செழுமலைக் குவட்டி னோட்டி முருக்கிய வுருவு வேட்கை முனைப்புல மகற்றி முற்றிச் செருக்கிய வினைவர் வாழுந் திண்குறும் பழிக்க லுற்றான். | (இ - ள்.) தருக்கு எயில்காப்பு வாங்க - வினைப்பகைவருடைய யான் எனது என்னும் செருக்குகளாகிய மதிலரணை அழித்தற் பொருட்டு, தடக்கைமால் பகடுநுந்தி - வலிய கையையுடைய பெரிய யானையைக் கடாவி, திருக்கிளர் குணமேற்சேடி - நன்மை மிக்க குணம் என்னும் வித்தியாதரர் உலகத்திலே அமைந்த, செழுமலைக் குவட்டின் ஓட்டி - செழித்த மலையினது உச்சியிலே செலுத்தி, முருக்கிய உருவு வேட்கை முனைப்புலம்அகற்றி - முருகி வளர்ந்த விழைவே உருவமாகிய போர் முனைக்கண்ணே பகைவர் வாராதபடி ஒழித்து, முற்றி -பகைவர் கோட்டையை வளைந்துகொண்டு, செருக்கிய வினைவர் வாழும் - செருக்குடைய வினைப்பகைவர் வாழிடமான, திண் குறும்பு அழிக்கலுற்றான் - திண்ணிய அக அரண்களையும் அழிக்கலானான், (எ - று.) தவம் இயற்றுதற்குரிய நற்குணங்களை ஈண்டு வித்தியாதரர் உலகத் தோடு உவமித்தார் திண் குறும்பு - வலிய காவற்காடு, அதாவது மெய் வாய் கண் மூக்குச் செவி எனப் பேர்பெற்ற ஐ வாய வேட்கை அவா. | ( 46 ) | | |
|
|