பயாபதி வீட்டுலகின் முடியிற் சூளாமணியாய் விளங்குதல் | 2127. | 1களங்காண் வகையுடைந்து காலர் காமர் கையகல விளங்காத் திசையின்றி விளங்க வீரன் மெய்ப்பொருளை 2உளங்காண் கேவலப் பேரொளியா 3லிம்ப ருலகெல்லாம் துளங்கா 4துயர்ந்துலகின் முடிக்கோர் சூளா மணியானான். | (இ - ள்.) களங் காண் வகை உடைந்து - போர்க்களத்தே நின்று வெற்றிகாணும் தமக்கே உரிய பேராற்றலின் கூறுபாடுகள் அனைத்தும் சிதறப் பெற்றவராய், காலர் காமர் - காலரும் காமரும், கையகல - கையறுநிலை எய்தி ஒழியாநிற்ப, வீரன் - பேராண்மையுடைய பயாபதி, விளங்காத் திசையின்றி விளங்க - தன் புகழ் விளங்குதலில்லாத திசை ஒன்றேனும் இல்லாதபடி யாண்டும் விளக்கமுடையவனாய், மெய்ப் பொருளை உளம் காண் கேவலப் பேர் ஒளியால் - செம்பொருளை உள்ளம் உணர்தலால் உண்டாகின்ற கேவலஞானம் என்னும் பெரிய ஒளியுடைமையால், துளங்காது இம்பர் உலகம் எல்லாம் - நடுக்கமின்றி இவ்விடத்தவாய அனைத்துலகங்கட்கும், உயர்ந்து - உயர்ந்துள்ள, உலகின் முடிக்கு - வீட்டுலகத்தின் சிகரத்திற்கு, ஓர் சூளாமணி ஆனான் - ஒப்பற்ற சூளாமணி ஆகித் திகழ்ந்தான், (எ - று.) சூளாமணி - முடியைச் சுற்றிச் சூட்டப்படும் ஒரு மணி மாலை. இந்நூலின் பெயராகிய சூளாமணி என்பது தம்மையாற் பெற்ற பெயர் என்று சான்றோர் கூறுவர், இங்கும் பயாபதிவேந்தனைத் தன்மையாற் சூளாமணியோடு உருவகித்தல் காண்க. | ( 59 ) | | |
|
|