(இ - ள்.) அண்ணல் அம்கோமகள் - பெருமையிற்சிறந்த அழகிய சுவலனசடியரசனுடைய மகள் ஆகிய சுயம்பிரபை, தண் அவிர் - குளிர்ச்சியாய் விளங்குகின்ற, நிலாச்சுடர் தவழும் - திங்களொளி வீசப்பெறும், அவ்வரைக்கண் - அந்த வெள்ளிமலையினிடத்திலே, அவிர் - விளங்குகின்ற, சென்னிமேல் - முடியின் மீதுள்ள, கடவுள் தானம் அஃது - கடவுளின் வடிவத்தை; அருச்சித்து - வழிபாடுசெய்து, ஆயிடை - அவ்விடத்தில், விண்ணவர் உலகமும் வியப்ப ஏத்தினாள் - தேவஉலகத்தினரும் வியந்து புகழுமாறு போற்றலானாள். (எ - று.) கடவுள் தானம் அஃது அருச்சித்து - ஸ்ரீ கோயிலில் எழுந்தருளிய அருகக்கடவுட்கு அருச்சனை செய்து; கடவுள் கோயில் கொண்டுள்ள இடம் கடவுள்தானம். விண்ணவருலகமும்; உம் உயர்வு சிறப்பு. |