விசயதிவிட்டர் மகிழ்ச்சி | 2130. | வலம்புரி வண்ணனு மகர முந்நீர் மணிமேனி உலம்புரி தோளி 1னனு முலக மெல்லா முடன்வணங்கச் சலம்புரி வினைவென்ற தங்கோன் செந்தா மரையடிக்கீழ் நலம்புரி விழவியற்றி நாளு நாளு மகிழ்கின்றார். | (இ - ள்.) வலம்புரி வண்ணனும் - வலம்புரிச்சங்கை ஒத்த வெண்மைநிறமுடைய விசயனும், மகரம் முந்நீர் - மகர மீன்களையுடைய கடல் நிறத்தையும், மணி மேனி - நீலமணி போன்ற நிறத்தையும் உடைய, உலம்புரி தோளினனும் -உலக்கல்போன்று திரண்ட தோளையுடைய திவிட்டனும், உலகம் எல்லாம் உடன்வணங்க - எல்லா வுலகங்களும் ஒருங்கே தம்மை வணங்காநிற்ப, சலம்புரி வினைவென்ற - வஞ்சனை செய்கின்ற வினைப்பகையை வென்றவனாகிய, தங்கோன் - தம் பெருமானாகிய அருகபரமேட்டியின், செந்தாமரையடிக்கீழ் - செந்தாமரை போன்ற அழகிய திருவடியின்கீழே, நலம்புரி விழவு இயற்றி - நன்மையை விளைவிக்கின்ற திருவிழாச்செய்து, நாளும் நாளும் - நாள்தோறும், மகிழ்கின்றார் - மகிழ்ச்சியுடனே வதிவாராயினர், (எ - று.) வாலறிவன் நற்றாள் தொழுதலே மனித வாழ்க்கைக்குச் சிறந் துரிமையுடைய செயலாகலின், “சலம்புரிவினை வென்ற தங்கோன் செந்தாமரை யடிக்கீழ் நலம்புரி விழவியற்றி நாளும் நாளும் மகிழ்கின்றார்“ என்றார், “மகிழ்கின்றார்“ என்னும் இனிய மங்கலச் சொல்லாலே நூல் முடிதல் கண்டு மகிழ்க. | ( 62 ) | | |
|
|