திங்கள் தோன்றினால் சந்திரகாந்தக்கல் நீரினை
வெளிப்படுத்தும்

260. சூழ்கதிர்த் தொழுதி மாலைச் சுடர்ப்பிறைக் கடவு டோன்றித் தாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்திர காந்த மென்னும்
வீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே
போழ்கதிர் பொழிந்து பொங்கிப் 1புலானிணம் பொழியும்
வேலோய்
 

     இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர்

     (இ - ள்.) போழ்கதிர் - இருளைப் பிளக்கும் ஒளியை, பொங்கி பொழிந்து - மிக்கு
வெளிப்படுத்தி, புலால் நிணம் பொழியும் வேலோய் - பகைவர் புலாலாகிய ஊனைச்
சிந்துகிற வேற்படையை யுடையவனே, கதிர்த் தொழுதி மாலைசூழ் - ஒளிப்பிழம்பின் கூட்ட
வரிசையால் சூழப்பெறுகின்ற, சுடர்ப் பிறைக் கடவுள் தோன்றி - வெள்ளிய பிறைத்திங்கள்
எழுந்து, தாழ்கதிர் சொரிந்த போழ்தில் - வீழாநின்ற ஒளிப்பிழம்பை வெளிப்படுத்திய காலத்தில், வீழ்கதிர் விளங்கு சந்திரகாந்தம் என்னும் வட்டம் - விழுகின்ற ஒளியானது
விளங்குகின்ற சந்திரகாந்தக் கல்லானது, வெள்ளம் நீர் விரியும் - மிகுதியான
நீரைப்பொழியும் (எ - று.)
அன்றே: அசை.

தொழுதி - திரள் - மாலை - ஒழுங்கு; இயல்புமாம். தாழ்கதிர் - வினைத்தொகை.
சந்திரகாந்தம் - திங்கள் ஒளிப்பட்ட உடன் நீர்காலு மியல்புடைய தொருகல்.

( 21 )