(இ - ள்.) வேந்தே - அரசே!, படையினது அமைதி - படையின் பலம். கூழின் பகுதி - பொருளின் நிலைமை, என்று இவற்றின் பன்மாண் புடையவர் - என்று கூறப்பெறும் இவற்றினாற் பெருஞ் சிறப்புடையவர், அவனொடு ஒப்பார் மற்று ஒருவர் இல்லை - அவனுக்கு நிகரானவர் வேறொருவரும் இலர், விடயம் ஒன்று இன்றி வென்ற - கை கூடப்பெறாத பொருள் ஒன்றுமில்லாமல் எல்லாவற்றையும் வெற்றியாக அடைந்த, சுடர்விடு ஆழி யாளும் நடையவன் - ஒளியை வெளிப்படுத்தும் உருளைப்படையைத் தாங்கிய அவ்வச்சுவக்கிரீவன், உவப்பின் - மகிழ்ச்சியையடைந்தால், ஞாலம் பிறர் உழை நடப்பது என்றான் - உலகமானது மற்றவர்களிடத்திலே அரசாட்சி செய்யப் பெறுதலை யடையுமென்று கூறினான், (எ - று.) அவ்வச்சவக்கிரீவனுக்கு மகிழ்சியுண்டாகுமாறு நடப்பவர்களே அரசாட்சி பெறுவர் என்பது கருத்து. |