வேறு
சுச்சுதன் சொல்லியவை உண்மை என்றல்

308. நூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான்
மேலா ராயு மேதைமை யாலு மிகநல்லான்
தோலா நாவிற் சுச்சுதன் சொல்லும் பொருளெல்லாம்
வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே 1மிகையாலோ.
 

     (இ - ள்.) வேலார் கையாய் - வேற்படை பொருந்திய கையையுடையவனே! நூல்
ஆராய்ந்து - நூல்களை ஆராய்ச்சி செய்து, நுண்பொறி கண்ணும் - நுண்ணிய பொருளைக்
கண்டுணரும், நொடிவல்லான் - சொல்வன்மையை யுடையவன், மேலார் ஆயும் -
மேலானவர்கள் ஆராயும், மேதைமையாலும் மிக நல்லான் - அறிவுடை
மையாலும் மிகச் சிறந்தவன், தோலாநாவிற் சுச்சுதன் - சொல்லாற் பிறர் தன்னை வெல்ல
மாட்டாத வன்மை படைத்த சுச்சுதன், சொல்லும் பொருள் எல்லாம் - கூறுஞ்செய்திகள்
யாவும், மெய்ம்மைய - உண்மை யானவைகளாம், மிகை அன்று - மிகுதிப்படுத்திச் சொல்வ
தன்று, ஏ, ஆல், ஓ: அசைநிலைகள். (எ - று.)

அச்சுவக்கிரீவனை மறுக்கத் தொடங்குவோன் சுச்சுதன், தன் மாட்டு வெறுப்புக்
கொள்ளாவாறு இவ்வாறு தொடங்குகிறான். நொடி வல்லான், தோலாநாவிற் சுச்சுதன்
என்பன, அவன் கூறியன அவன் சொல்வன்மையால் மெய்ம்மைய போன்றிருக்கின்றன;
உண்மையில் அவை அத்துணை வாய்மையல்ல என்பது குறிப்பு.

( 70 )