313.

என்றா லன்றச் சாதக வோலை 1யெழுதிற்றால்
குன்ற வென்றிக் குன்றுறழ் யானைக் கொலைவேலோய்
நன்றா நங்கைக் கொன்றிய காமப் பருவத்தால்
நின்றா னன்றே யின்றுணை யாகுந் 2நிலைமேயான்.
 

     (இ - ள்.) என்று அன்று அச்சாதக ஓலை - என்று அக்காலத்தே அவட்கு அச்சாதக
ஓலையன்கண், எழுதிற்று - எழுதப்பட்டுள்ளது, ஆதலால், குன்றா வென்றி - குறையாத
வெற்றியையும், குன்று உறழ் - மலையை ஒத்த, யானை - யானையையும், கொலை
வேலோய் - கொலைத் தொழில் மிக்க வேலினையும் உடைய மன்னனே, நன்றாம்
நங்கைக்கு - மேற்கூறிய நன்மையுண்டாதற்குரிய நம் சுயம்பிரபைக்கு, காமப் பருவத்தால் -
காமம் நுகர்தற்குரிய இளம்பருவத்தோடே, நின்றான் அன்றே - நிற்பவன் அல்லனோ,
ஒன்றிய - பொருந்திய, இன் துணை ஆகும் - இனிய காதல னாகின்ற, நிலைமேயான் -
நிலைமையினை உடையன் ஆகுவான், (எ - று.)
எனவே அகவையான் மிக்க அச்சுவகண்டன் அவட்குக் காதலனாகான் என்றானாயிற்று.

( 75 )