மன்னன் வினாதல்

317. அன்னா னாயி னாதலி னன்றே யவனல்லால்
என்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும்
இன்னா னின்னா ராள்வா னிவனென்றே
அன்னா 1னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான்.
 

      (இ - ள்.) அன்னான் ஆதலின் - இரத்தின கண்டன் அத்தகையோன் ஆதலான்,
ஆயின் - அவன் சுயம்பிரபைக்குக் கணவனாயின், நன்றே - நல்லதேயாகும்; அவன்
அல்லால் - அவன் கணவனாகாதவிடத்து; என்னான் ஆவான் - யார் தான் எவ்வாற்றானும்
அவட்குத் தகுந்த கணவனாகத் தகுந்தவன் கூறுக, என்றனன் - என்று அரசன்
வினாயினான், எனலோடும் - அவ்வாறு வினவியவுடனே, இன்னான் இன்னான் இவன் -
இவன் இந்த நகரத்தை ஆள்பவன் இவன் இந்நகராள்வான்; என்றே - என்று, அன்னான் -
அவ்வமைச்சன், அன்னாற்கு - அம்மன்னனுக்கு, அந்நகர் எல்லாம் - அந்த நகர இயல்பு
எல்லாம் கூறி, அறிவித்தான் - அறிவிப்பானாயினான். அரசன் இரத்தின கண்டனை ஒருவாறு ஒத்துக்கொண்டு மேலும் தகுதி உரையாரையெல்லாம் கூறுக என அமைச்சன்
வேறு மனனர் மக்களின் இயல்பையும் அவர் ஆளும் நகரங்களையும் மன்னனுக்கு எடுத்துக் கூறினான் என்க.

( 79 )