நெய்தல் | 32. | சங்கு நித்தில முந்தவ ழிப்பியும் தெங்கந் தீங்குலை யூறிய நேறலும் வங்க வாரியும் வாரலை வாரியும் தங்கு வாரிய தண்கட னாடெலாம். | (இ - ள்.) சங்கு நித்திலமும்-வலம்புரிச் சங்கு ஈன்ற முத்துக்களும்; தவழ் இப்பியும்-தவழ்ந்துசெல்லும் இப்பியிற் பிறந்த முத்துக்களும்; தெங்கு அம்தீம்குலை ஊறிய தேறலும்-தென்னையின் அழகிய இனிய பாளையில் ஊறிய கள்ளும்; வங்கவாரியும்-மரக்கலங்களின் மூலமாகப் பிறநாடுகளிலிருந்து வரும் பண்டங்களும்; வார்அலை வாரியும்-நீண்ட கடலிடத்தே உண்டாகும் பொருள்களும் ஆகிய; தண்கடல் நாடுஎலாம்-குளிர்ந்த நெய்தல்நிலம் முற்றும்; தங்குவாரிய-நிலைபெற்ற வருவாய்களை யுடையனவாகும் (எ - று.) தேறல்-தெளிந்த இளநீர் எனினுமாம். சங்கு முதலியன நெய்தல்நிலத்து வளங்கள். மூன்றாவதடி முற்றுமோனையாக அமைந்திருக்கிறது. வலம்புரி முத்துக்களும், இப்பிமுத்துக்களும், தென்னங்கள்ளும், மரக் கலங்களின் மூலமாகப் பிற நாடுகளில் இருந்துவரும் பொருள்களும் கடலில் உண்டாகும் பொருள்களும் நெய்தல்நிலத்தில் மிகுந்துள்ளன என்க. | ( 32 ) | |
|
|