(இ - ள்.) அல்லி நாண்மலர் தாரும் - அகவிதழ்களையுடைய அன்றலர்ந்த மலர்மாலையும், முத்தாரமும் - முத்து மாலையையும், வல்லி ஆங்கு அணிசாந்தும் வனைந்து - கொடியாக அங்கு எழுதப்படுகின்ற சந்தனத்தையும் அணிந்து, உராய் மல்லினால் மலி மார்பற்கு - மோதுகின்ற மற்போரிலே சிறந்து விளங்குகிற மார்பையுடைய சடியரசனுக்கு, இவை - மேற் கூறப்போகும் மொழிகளை, சுதசாகரன்-சுகசாகரன் என்னும் பெயரினை யுடைய அமைச்சன், சொல்லினான் - சொல்லத் தொடங்கினான், (எ - று.) சுதசாகரன் என்னும் அமைச்சன் தன் எண்ணங்களை வெளியிடுகிறான். ஆங்கு - அசையுமாம். என்ப : அசை. |