(இ - ள்.) சுடர் வேலினாய் - ஒளிதவழுகின்ற வேற்படையை யுடையவனே! ஆயினும் சிறிது உண்டு அறி - ஆனாலும் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டியதும் இருக்கின்றது அதனையும் அறிந்துகொள்வாயாக அஃதென்னெனின், வண்டினம் பாயினும் பனிக்கும் - வண்டுக்கூட்டங்கள் மாலையிற் பாய்ந்தாலும் அதனால் வருந்துதலையடையும், படர் கோதை தன் - படர்ந்த மாலையினையணிந்த சுயம்பிரபையின், வேயினும் பணைக்கின்ற மென்தோள் - மூங்கிலைக்காட்டினும் பருத்து விளங்குகின்ற மெல்லியதோளை, பிறர் தோயினும் பகையாம் - மற்றைய அரசர்கள் சேர்ந்தாலும் அச்சுவகண்டனுடைய பகை நமக்கு உண்டாவதாம், (எ-று.) |