(இ - ள்.) விண்டு வாழுநர் மேல் - பகைமையினால் வேறுபட்டு வாழ்பவர்கள்மேல், நகும் வேலினாய் - இகழ்ந்துநகையாடல் புரியும் வேற்படையை யுடையவனே!, வண்டு அவாம்முடி மன்னருள் - வண்டுகள் விரும்புகின்ற மாலையையணிந்த முடியரசர்களுள்ளே, அவன் தண்டம் ஆற்றுநர்தாம் இலை - அவ்வச் சுவக்கிரீவனுடைய தண்டனையைத் தாங்கக் கூடிய அரசர்கள் இல்லை, யான் உரைப்பான் உறுகின்றது - யான் சொல்லும்படியாகவுள்ளது, சிறிது உண்டு - சிறிது இருக்கின்றது, (எ - று.) ஆல் : அசைநிலை. அச்சுவகண்டனுடைய பகையைத் தேடிக்கொள்ளக்கூடாது என்னும் குறிப்புடன் கூறுகிறான். |