திணைமயக்கம் (ஒலி) | 34. | கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப் புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல் உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே. | (இ - ள்.) கலவர்தம் சிறுபறை இசையின்-மரக்கலமோட்டும் பரத வருடைய சிறுபறையின் ஒலியால்; கைவினைப்புலவர்-உழுது பயிர் செய்தலாகிய கைத்தொழிலில் தேர்ச்சியையுடைய மருதநிலத்து மக்களது: தேம்பிழிமகிழ் குரவைபொங்கும்-இனிய கள்ளையுண்டதனாற் களித்தாடுகின்ற குரவைக் கூத்துச் சிறப்பையடையும்; குலவுகோல கோவலர்-வளைந்த கோலையுடைய இடையர்களுடைய; கொன்றை தீம்குழல்-முதிர்ந்த கொன்றைக் காயினாலாகிய இனிய குழலினது இசையால்; உலவுநீள் அசுணமா உறங்கும்-குறிஞ்சிநிலத்தில் உலவுகிற அசுணமா துயில்கொள்ளும். (எ - று.) | ( 34 ) | |
|
|