சுயம்பிரபைக்கு விச்சுவன் தகுந்தவன் ஆவன் எனல்

342. காம்பின் வாய்ந்தமென் றோளியக் காதலன்
தீம்பன் மாலைநன் மார்பகஞ் 1சேருமேல்
ஆம்பன் மாலையு மாய்கதிர்த் திங்களும்
தாம்பன் மாலையுஞ் 2சார்ந்த தனைத்தரோ.
 

     (இ - ள்.) காம்பின் வாய்ந்த - மூங்கிலை ஒத்த, மென்றோளி - மெல்லிய
தோளையுடைய சுயம்பிரபை, அக் காதலன் - அந்தக் காதலுடை யோனின், தீம் பல்
மாலை - இனிய பல மாலைகளை அணிந்த, நன் மார்பகம் - நல்ல மார்பினை, சேருமேல்
- கூடுவாளாயின், ஆம்பல் மாலையும் - ஆம்பல் மலரின் வரிசையும், ஆய் கதிர்த்
திங்களும் - நுண்ணொளியையுடைய திங்கள் மண்டிலமும், தாம் - தம்முள்ளே, பன்
மாலையும் - பலவாகிய மாலைக் காலந்தோறும், சார்ந்தது - பொருந்தியதனை அனைத்து -
ஒப்பாகும். (எ - று.)

திங்களின் வருகையால் ஆம்பல் மலரும், ஆதலின் திங்களை ஆம்பலின் காதலனாகக்
கூறுதல் கவிமரபு.

( 104 )