சுதசாகரன் முடிவுரை

346. இன்ன வாறிசை யப்பெறின் யாவரும்
என்ன வாறு மிகப்பவ ரின்மையால்
அன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான்
சொன்ன வாறுகொண் டீசுடர் 1வேலினோய்.
 

     (இ - ள்.) சுடர் வேலினோய் - ஒளியமைந்த வேற்படையையுடைய வனே, இன்ன
ஆறு இசையப்பெறின் - நான் கூறியபடி இவ்வாறு அமையப்பெற்றால், யாவரும்
என்னவாறும் இகப்பவர் இன்மையால் - எத்தகையோரும் எவ்வாறும் மறுக்க
மாட்டார்களாகையால், அன்ன ஆறு அருள்உண்டெனில் - அவ்வாறு செய்வதற்கு
மனமுள்ளதாயின், ஆய்ந்து யான் சொன்னவாறு கொண்டீக - ஆராய்ச்சி செய்து நான்
சொன்னபடி கொடுப்பாயாக! (எ - று.)
சுதசாகரன் தன்னுரையை இத்துடன் முடித்துக்கொள்கிறான்.

( 108 )