விலக்கியதற்குக் காரணம் காட்டுதல்

350. மங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி
அங்கயல் பிறழ்வ போலு 4மையரி யடர்ந்த வாட்கண்
பங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில்5 பயின்ற போழ்தும்
தங்கிய மனத்த 6னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான்.
 

      (இ - ள்.) மங்கையர் முகத்தில் நீண்டு - பெண்களுடைய முகத்திண் கண்
நீளமாயமைந்து, கடைமதர்ப்ப மை மாந்தி - கடைக்கண்களானவை செருக்குதலையடைய
மையை மிகுதி யாகப் பூசப்பெற்று, அம்கயல் பிறழ்வ போலும் - அழகிய கயல்மீன்களின் பிறழ்ச்சியைப்போல் பிறழ்ச்சியினை யுடையவாய், ஐஅரி அடர்த்த வாள்கண் - அழகிய செவ்வரிகளை மிகுதியாகக் கொண்டுள்ள வாளைப் போன்ற கண்கள், தவத்தின்மிக்கான் - தவத்திற் சிறந்தவனும், பங்கயச் செங்கணான்மேல் - தாமரை மலர்போன்ற சிவந்த
கண்களையுடையவனு மாகிய விச்சுவன் மீது, படைத்தொழில் பயின்ற போழ்தும் -
படைக்கலங்களின் கொலைத்தொழிலைத் தாம் மேற்கொண்ட விடத்தும், தங்கிய
மனத்தன்ஆகி - தவத்திலே தங்கிய உள்ளத்தை யுடையவனாகி, தளர்விலன் - சிறிதும்
வருந்துதலை யடையான் (எ - று.)
மங்கையர் கண்கள் விச்சுவனை வருத்தமாட்டா என்க.

( 112 )