மேகவாகனன் விச்சுவன் வரலாறு கேட்டல்

352.

செறிகழ லவற்குத் தாதை சித்திர கூட மென்னும்
அறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்ந்த காலை
இறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேர
உறுவனை வணங்கிக் கேட்டான் மகன்றிற 1முலங்கொ
டோளான்.
 

      (இ - ள்.) செறிகழல் அவற்குத் தாதை - பொருந்திய வீரக்கழலை யணிந்த அந்த
விச்சுவனுடைய தந்தையாகிய, உலங்கொள் தோளான் - திரண்ட கல்லைப்போன்ற
தோள்களையுடைய மேகவாகனன், சித்திரகூடம் என்னும் அறிவரன் கோயில் எய்தி -
சித்திரகூடம் என்று கூறப்படுகின்ற அருகக் கடவுள் கோயிலையடைந்து, அணிவிழா
அயர்ந்தகாலை - அழகிய திருவிழாச் செய்தபொழுது, இறுதியில் - முடிவில், அவதி
ஞானத்தையுடைய யசோதரன் என்னும் பெயரையுடைய முனிவனைப்போற்றி, மகன்திறம
கேட்டான் - மகனுடைய வரலாற்றைக் கேட்டான் (எ - று.)

மேகவாகனன் யசோதரன் என்னும் முனிவனைப் போற்றி மகனுடைய தன்மையைப்பற்றி
உசாவினான் என்க. அவதிஞானி - முக்கால நிகழ்ச்சி களையும் உணரும் அறிவுடையோன்.

( 114 )