(இ - ள்.) பங்கயப் பழன வேலிப் பவகிரி அரசன் - தாமரை மலர்ந்த வயல்களை வேலியாகவுடைய பவகிரி என்னும் நாட்டின் அரசன், பைந்தார் தங்கிய தடங்கொள் மார்பன் சயசேனன் - பசியமாலை தங்கிய அகன்ற மார்பையுடைய சயசேனன் என்பவன், அவற்குத் தேவி - அவனுடைய மனைவி, செங்கயல் நெடுங்கன் செவ்வாய்ப் பிரீதிமதி - செவ்விய கயல போன்ற நீண்ட கண்ணையும் சிவந்த வாயையுமுடைய பிரீதிமதி என்பவள், பயந்த காளை - பெற்ற மகன், வெம்களி யானை வல்ல விசயபத்திரன் என்பான் - கொடிய களிப்புப்பொருந்திய யானையைப் போலும் ஆற்றலுடைய விசயபத்திரன் என்னும் பெயரையுடையவன் (எ - று.) |